tamilnadu

img

நாடு முழுவதும் 150 ரயில்கள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு

நாடு முழுவது 150 ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை இணைந்து முடிவு செய்துள்ளது.

நிதி ஆயோக் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில், 100 ரயில் பாதைகளில் இயங்கக்கூடிய 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, ரூ.22,500 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை - ஹவுரா, சென்னை - ஓக்லா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், சந்தை அடிப்படையிலான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களை இயக்குவது, உள்நாட்டு நிறுவனங்களாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களாகவோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே  கடந்த 31-ஆம் தேதி ரயில் கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியது. இந்நிலையில், தனியாருக்கு கட்டணங்கள் நிர்ணயத்துக்கும் உரிமை வழங்கப்படுவதால், மேலும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.