1947 - ‘ட்ரூமன் கோட்பாடு’ என்று குறிப்பிடப்படும், அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கை நிலைப் பாட்டை, குடியரசுத்தலைவர் ஹாரி ட்ரூ மன் அறிவித்தார். புரியும்படி சொன்னால், சோவியத்தின் பொதுவுடைமை அரசின் செயல்பாடுகளால், அல்லது சோவியத் ஒன்றியம் செய்யும் உதவிகள் முதலானவற்றால் ஈர்க்கப்பட்டு, சோவியத் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய வாய்ப்பிருக்கிற நாடுகளுக்கு, கூடுதல் உதவிகளை அளித்து, சோவியத்துக்கு ஆதரவாக மாறிவிடாமல் தடுப்பதே நோக்கம்! நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜெர்மனியை நிர்வகிப்பதில் முரண்பாடுகள் ஏற்பட்டு, தங்கள் பகுதியை கிழக்கு ஜெர்மனியாக சோவியத் மாற்றியதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போரில் பாசிசத்துக்கெதிரான (அமெரிக்காவின்) கூட்டணி நாடு என்ற நிலையிலிருந்த சோவியத் ஒன்றியத் தின்மீதான பார்வை மாறி, ஜார்ஜ் கென்னன் அனுப்பிய நீளத் தந்தியைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய (எதிரி!) நாடாகியிருந்தது.
ஏஜி யான் கடல், மத்தியதரைக் கடல் ஆகியவற்றை கருங்கடலுடன் இணைக்கும் துருக்கிய(சானக்கேல், இஸ்தான்புல்) நீரிணைகளில், அப்பகுதியைச் சாராத நாடுகளின் கடற்படைக் கலங்களை அனுமதிப்பதில்லை என்பதை, அப்பகுதிக்கு அருகிலிருந்த சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. கிரீசில் ஆட்சிக்கெதிராக கம்யூ னிஸ்ட் கட்சி போராடிக்கொண்டிருந்தது. ஸ்டாலின்-சர்ச்சில் இடையே (ரகசிய மாக) ஏற்பட்டிருந்த ‘சதவீத ஒப்பந்தத்தால்’ கிரேக்கக் கம்யூனிஸட்டுகளுக்கு சோவியத் உதவவில்லை என்றாலும், அப்போதுதான் பொதுவுடைமை நாடாகி யிருந்த யூகோஸ்லாவியா உதவியது. இந்தப் பின்னணியில்தான், சோவியத்தின் பலம் அதிகரித்து, பொதுவுடைமை பிற நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சத்தில் ட்ரூமென் இக்கோட்பாட்டை அறிவித்தார்.
துருக்கிக்கும், கிரீசுக்கும் உதவிக்கொண்டிருந்த இங்கிலாந்து, தங்கள் நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் உதவிகளை நிறுத்திக்கொண்டது. சோவி யத்தின் ஆதிக்கத்தைத் தடுக்க, துருக்கிக்கு ராணுவ உதவியுடன் 10 கோடி டாலர்கள் பொருளாதார உதவியும் அளித்தது அமெரிக்கா. கம்யூனிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் கிரீஸ் சென்றுவிட்டால், துருக்கி நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது, அது அப்பகுதி முழுவதிலும் கம்யூனிசத்தை வளரச்செய்துவிடும் என்று அமெரிக்க நாடாளு மன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ட்ரூமென் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு மேலும் 40 கோடி டாலர்கள் பொருளாதார, ராணுவ உதவிகளுக்கு அனு மதியளிக்கப்பட்டது. பொதுவுடைமையின்பால் திரும்பிவிடாமல், நிதி முதலான உதவிகள்மூலம், நாடுகளைத் தடுப்பது அமெரிக்காவின் வழக்கமாகவே மாறியது.
- அறிவுக்கடல்