tamilnadu

img

இறுதி ஊர்வலத்தில் தற்கொலைப்படை தாக்குதல்....  ஆப்கானிஸ்தானில் 40 பேர் பலி  

காபூல் 
உலகமே கொரோனாவை விரட்ட ஊரடங்கு விதித்து மக்களைப் பாதுகாத்து வரும் நிலையில், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ளது. பிஸியாக உள்ளன. அந்நாட்டில் கொரோனா பரவல் இல்லையென்றாலும் குண்டுவெடிப்பு மூலமாக கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இல்லையென்றாலும், பாகிஸ்தான் போன்று தீவிரவாதிகள் தாக்குதலில் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது.  

இந்நிலையில் அந்நாட்டின் குஸ்குனர் என்ற மாவட்டத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் நடத்தியுள்ளனர். இதில் அப்பாவி மக்கள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.