போர்ட் லூயிஸ்
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள குட்டிநாடான மொரிஸியஸில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3,800 டன் எண்ணெய் சரக்குடன் கடல் பகுதியில் சென்ற பொழுது பாறையில் மோதி விபத்துள்ளானது.
இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த எண்ணெய்கள் கடலில் கசியத் தொடங்கியது. கசிவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்ட பொழுதிலும் பலனில்லை. இதனால் மொரிசியஸ் அரசு அவசர நிலை அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்த எண்ணெய் கசிவு விபத்தால் அரிய கடல் உயிரினமான டால்பின்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை 30-க்கும் மேற்பட்ட இருந்துள்ளதாக மொரிசியஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் கசிவு விபத்து காரணமாக ஜப்பான் கப்பலில் ஒரு மாலுமி கைது செய்யப்பட்டுள்ளார்.