புதுதில்லி,ஜூன் 28- உலக மக்களை அச்சுறுத்தி வருகின்ற, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப் பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கையில் ஒரு கோடியை தாண்டியுள்ளது. உலக அளவில் தினந்தோறும் கொரோ னாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ஜூன் 28 அன்று உலக அளவில் மேலும் 5,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பேராக அதிகரித்துள்ளது. மேலும் உலக அள வில் கொரோனா தொற்றால் 636 பேர் உயிரிழந்த தால், பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 1,868 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 லட்சத்து 80 ஆயிரத்து 877பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிக மாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. (பாதிப்பு - 25,96,771 பேர், உயிரிழப்பு - 1,28,152 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 13,15,941 பேர், உயிரிழப்பு - 57,103 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 6,34,437 பேர், உயிரி ழப்பு - 9073 பேர்) உள்ளன. நான்காவது இடத்தில் உள்ள இந்தியா வில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அள வாக 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் மிக அதிக அளவாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள் ளது. நாட்டில் மொத்தம் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 பேர் ஆவர்.இதில் 2 லட்சத்து 03 ஆயிரத்து 051 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3 லட்சத்து 09 ஆயிரத்து 713 பேர் குணமாகி வீடு திரும்பி யுள்ளனர். பலி எண்ணிக்கை 16,095 ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திணறும் அமெரிக்கா- மீண்டும் கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வு களுக்கு பின் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாகாணங்களில் தளர்த்தப்பட்டன. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவ தொடங்கியது. கடந்த சனிக்கிழமை மட்டும் ஃப்ளோரிடா மாகாணத்தில் கொரோனாவால் 9500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 9000 ஆக இருந்தது.இதனை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.25 லட்சம் பேர் பலி
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கும் அதிக மானோர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவர் ஃபெளசி கூறுகையில், சில பகுதிகளில் முன்னதாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுதான் இப்போது அதிகரித்திருக்கும் கொரோனா தொற்றுக்குக் காரணம். மக்கள் நெறிமுறைகளை பின்பற்று வது இல்லை. இதுவே பிறருக்கு கொரோனா பரவ காரணமாக உள்ளது என்று தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை களில் அமெரிக்காவின் முகமாக மருத்துவர் ஃபெளசி உள்ளார்.
என்ன நடக்கிறது ஃப்ளோரிடா-டெக்சாஸில்?
கடந்த 24 மணி நேரத்தில் ஃப்ளோரிடா வில் 9,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டி ருப்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஃப்ளோரிடாவில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,300 பேர் பலியாகினர். தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து, அங்கு கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டது. கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதை டெக்சாஸ், ஃப்ளோரிடா மற்றும் அரிசோனா மாகாணங்கள் நிறுத்திவைத்தன. ஃப்ளோரிடா ஆளுநர் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தார்.
அமெரிக்காவின் நிலை
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி அமெரிக்காவில் இப்போது வரை 25 லட்சத்து 08 ஆயிரத்து 705 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர், 1 லட்சத்து 25 ஆயிரத்து 511 பேர் பலியாகியுள்ளனர். 6 லட்சத்து 79 ஆயிரத்து 308 பேர் மீண்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
அமெ.வில் 2 கோடி பேர்
ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கலாம் இந்நிலையில் அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ள 24 லட்சத்தை விட உண்மையான பாதிப்பு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த நாட்டின் நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருவதால் அங்கு ஏற்கனவே திட்ட மிடப்பட்டிருந்த முடக்க நிலை தளர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்திய நிலவரத்தின்படி, அமெரிக்கா வில் இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோ ருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதிகளிலுள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருவது அங்கு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.