tamilnadu

img

குறையும் கொரோனா பரவல்... பெல்ஜியத்தில் இயல்பு நிலை திரும்புகிறது....   

பிரஸ்ஸல்ஸ் 
1.15 கோடி மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான பெல்ஜியம் பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளன. ஐரோப்பாவின் வளமிக்க நாடுகளில் ஒன்றான இந்த பெல்ஜியம் தற்போது கொரோனவால் உருக்குலைந்துள்ளது. 

இதுவரை அங்கு 50 ஆயிரத்து 781 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக பெல்ஜியத்தில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று 242 பேர் மட்டுமே கொரோனவால் பாதிக்கப்பட்டு 92 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் பெல்ஜியத்தில் கொரோனா பரவல் இரு மடங்காகக் குறைந்துள்ளது உறுதியாகியுள்ளது. விரைவில் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெல்ஜியத்தில் கொரோனாவால் பெரும் சோகமான விஷயம் நிகழ்ந்துள்ளது. அது யாதெனில் குறைந்த கொரோனா பாதிப்பில் அதிக உயிரிழப்பைச் சந்தித்த  நாடு பெல்ஜியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.