tamilnadu

img

காந்தியை நம்பியே இந்தியாவுடன் இணைந்தோம்... ‘மோடி இந்தியா’வில் இருப்போம் என காஷ்மீரிகள் நினைக்கவில்லை.... பேட்டியில் பரூக் அப்துல்லா அதிரடி

ஸ்ரீநகர்:
தற்போதைய நிலைமையில் ஜம்மு - காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே உணரவில்லை; அந்த அளவிற்கு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இந்திய ஆட்சியாளர்கள் தள்ளி விட்டனர் என்று பரூக் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்தத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: உண்மையாகச் சொல்கிறேன் காஷ்மீரில் வசிக்கும் மக்களில் ஒருவர் கூட தங்களை இந்தியர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. மத்திய அரசு யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேட்டுப் பார்க்கட்டும். அதேநேரம் காஷ்மீர் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்று நினைக்கவில்லை. அதையும் நான் தெளிவுபடுத்தி விடு கிறேன். எப்படி நாங்கள் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்பதே எங் களுக்கு வியப்பாக இருக்கிறது. அரசை நம்ப முடியவில்லை என்ற மனநிலைக்கு காஷ்மீர் மக்கள் வந்து விட்டது தான் இதுபோன்ற விரக்தி நிலைக்கு காரணம். 

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு-காஷ்மீர் மக்கள் நினைத்திருந்தால் பாகிஸ்தானுடன் இணைந்து இருக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்கள் காந்தியின் வழியில் இந்தியாவில் சேர்ந்தனர். அவர்கள் மோடியின் இந்தியாவில் இருப்போம் என்று நினைக்க வில்லை. ஜம்மு - காஷ்மீரில் இந்தியா பற்றி யார் பேசினாலும் அதைக் காது கொடுத்து கேட்பதற்கு ஒருவரும் தயார் நிலையில் இல்லை. இதற்கு இப்போதைய மத்தியஅரசுதான் காரணம். ஒவ்வொரு தெருவிலும் இந்திய ராணுவத்தி னர் ஏகே 47 துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இங்கே சுதந்திரம் என்பது எங்கே இருக்கிறது?இவ்வாறு பரூக் அப்துல்லா பேட்டியில் கூறியுள்ளார்.