tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்... தெலுங்கானா மாநிலமும் இணைகிறது

ஹைதராபாத்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ் தான், மத்தியப்பிரதேசம், புதுச்சேரி ஆகியமாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.அந்த வரிசையில், தெலுங்கானா சட்டப் பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர, சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக தெலுங்கானா அரசு வெளியிட்ட அறிக்கையில், “குடியுரிமை வழங்கும் விஷயத்தில் எந்தவிதமான பாகுபாடும் மதத்தின் அடிப்படையில் பார்க்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தெலுங் கானா அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.