tamilnadu

img

மெகபூபாவின் மகள் இல்திஜா முப்தி கைது... செய்தியாளர்களைச் சந்திப்பதற்குத் தடை

ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி-யின் மகள் இல்திஜா முப்தி, திடீரென கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும், 370-ஆவது சட்டப்பிரிவின் கீழான உரிமைகளும் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மோடி அரசால்பறிக்கப்பட்டது. முன்னதாக அம்மாநிலத்தின் முக்கியத் தலைவர்களான- முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். ஏனைய அரசியல் கட்சிகள், அமைப்புக்களின் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.

அப்போதிருந்து, கல்லூரி மாணவியும், மெகபூபா முப்தியின் மகளு மான இல்திஜா முப்தி காஷ்மீரின்குரலாக தொடர்ந்து ஒலித்து வருகிறார். ஜனநாயகப் பூர்வமான வாதங்களால், மோடி அரசை கேள்விக்கு உள்ளாகி வருகிறார்.இந்நிலையில், மெகபூபா வின் மகள் இல்திஜா முப்தி, வியாழ னன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்திக்கவும், அனந்தநாக்கில் உள்ள தனது தாத்தாவும், மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனருமான முப்தி முகமது சயீத்தின் நினைவிடத்துக்கு செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாகவே ஸ்ரீநகரில் உள்ள குப்கார் இல்லத்தில் வைத்து இல்டிஜா முப்தி கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.