tamilnadu

img

அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்!

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள்பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று,அங்குள்ள தலைமை செயலாளர் உத்தர விட்டுள்ளார்.காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மோடி அரசு, இதுவரை இருந்துவந்த மாநில அந்தஸ்தையும் பறித்து, 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்பதால், முன்கூட்டியே ராணு வத்தினர் 40 ஆயிரம் பேரை அனுப்பி அடக்குமுறையை திணித்துள்ளது. தொலைத் தொடர்பு வசதிகளை முற்றிலு மாக துண்டித்துள்ளது. பள்ளி கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்தான், ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பணிகளுக்கு திரும்புமாறு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும், பணியை மேற்கொள்ள சுமூக மான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.