tamilnadu

img

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்
கொரோனா பதற்றத்துக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கம்ரஷிபுரா என்ற பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அசாத் லஹாரி தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதியாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.