சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். நெசவுத் தொழில் தான் இவர்களது வாழ்வாதாரம். தற்போது பொது முடக்கம் காரணமாக நெசவுத் தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது.
இந்தச்சூழலில் ஆத்தூர் ஒன்றியத்திலுள்ள சாட்டிங், ஆசீர்வாதம், கிராம விடியல், எல்.என்.டி.எஸ்.பேங்க், ஜனா பேங்க், சமஸ்தானம், சி.எ.சாப், கிரமின் குட்டா ஆகிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் கொடுத்தவர் களிடம் மிரட்டி பணத்தை உடனடியாக கட்டச் சொல்கின்றனர்.இந்தநிலையில் சுமார் 100-க்கும் மேற் பட்ட பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வனஜா தலைமையில் சின்னாளபட்டி காவல்துறையில் புகாரளித்த
னர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் கடன்வாங்கியவர்கள் கூறியதவாது:ஊரடங்கிற்கு முன்பே தொழில்முடங்கிவிட்டது. எங்கள் குடும்பத்தினர் வேலைக்குச் சென்று கடன் கட்டிவந்தோம். தற்போது ஊரடங்கால் எங்கேயும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், எங்களை கடன் கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். பணம் கட்ட முடியாவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்ளுங்கள், அதன் மூலம்கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகையிலிருந்து பணத்தை எடுத்துக்கொள் கிறோம் என மிரட்டுகின்றனர். கடந்தசில நாட்களுக்கு முன் திண்டுக்கல்ஆட்சியரிடம் மனுக் கொடுத்தோம். அவர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத் தில் மனுக்கொடுக்க சொன்னதன் அடிப்படையில் மாதர் சங்கத்துடன் இணைந்து மனுக்கொடுத்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.
மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வனஜா கூறுகையில், “பைனான்ஸ் நிறுவனத்தினர் பொதுமக்களை வட்டியுடன் சேர்த்து கடனைக் கட்டச் சொல்லி வற்புறுத்துகின்றனர். மக்கள்மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். வைரஸ் தொற்றால் பலர் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களை ஆசீர்வாதம் குழுவில் உள்ள ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இல்லாததால் சுய உதவிகுழு பெண்களுக்கு அரசு மாதம் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.