சென்னை, ஜன.27- பாரம்பரிய உணவுகள், விளையாட்டுகளுடன் சென் னையில் அசத்தல் கிராமத்து திருவிழா, நடைபெற்று வருகிறது. கிராமத்து திருவிழா பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும், இளைய சமுதாயம் அதனை தெரிந்து கொள்ளும் வகையிலும் சென்னையில் ‘கிராமிய உற்ச வம் 2020’ எனும் பெயரில் இந்த விழா பிப்ரவரி 2 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. சென்னை திருவான்மி யூர் கலாசேத்திரா மைதா னத்தில் (பாம்பன் சாமி கோவில் எதிரே) இத்திரு விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் கேப் பங்களி, கம்பு புட்டு, சிறு தானிய உணவுகள் என தமி ழரின் பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றுள்ளன என்று இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள பிக்-பி எண்டர் டெயின்மெண்ட் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மறந்து போன விளையாட்டுகள்
இன்னொருபுறம் கோலி, உறியடி, பம்பரம், பாண்டி போன்ற தமிழர் விளையாட்டு கள் அரங்கேறுகின்றன. இதன் மூலம் மறந்து போன நம் விளையாட்டுக்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கி றோம். மேலும் நாட்டின் பல் வேறு மாநிலங்களில் புகழ்பெற்ற துணி மணிகள், கைவினைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறுகின்றன. அதே வேளை ருத்ராட்சம், சாளக் கிராமக் கற்கள், நவரத்தி னங்கள், உபரத்தினங்கள், 21 மூலிகைகளைக் கொண்ட குளியல் பவுடர், முத்துக்க ளால் ஆன நகைகள், பஞ்ச லோக ஆபரணங்கள், அழகு சேர்க்கின்றன.
ராட்சத பறவைகள்
மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் காணப்படும் ராட்சத பறவை யும் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. விருப்பப் பட்டால் இதனை வாங்க லாம் அல்லது தங்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ லாம். மேலும் கரகாட்டம், ஒயி லாட்டம், மயிலாட்டம், காவடி யாட்டம், பறையாட்டம் என பாரம்பரிய ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன.