சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
சென்னை, அக். 28 - மருத்துவர்களின் போராட்டத் திற்கு ஆதரவாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், மேற்படிப்பில் 50 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அக்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 4வது நாளாக திங்களன்றும் (அக்.28) போரா ட்டம் தொடர்ந்து நடந்தது. இதன் ஒருபகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் 5 மருத்துவர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். இப்போராட் டக் களத்திற்கு சென்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து பேசியதாவது:
தமிழக அரசு ஏற்கெனவே மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 6 வாரத்தில் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக ஒப்புக் கொண்டது. 10 வாரங்களை கடந்த பிறகும் வாக்கு றுதியை நிறைவேற்றாததால், மருத்து வர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். இது மருத்துவர்களின் பிரச்சனையல்ல, மருத்துவ மனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளின் உயிர் பிரச்சனை. உயிர் காக்கும் மருத்துவர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசு உடடினயாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டால் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
மருத்துவர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மருத்துவர்களின் போராட்டம் அடுத்து அரசியல் கட்சிகளின் போராட்டமாக மாறும். இந்நிலையில் தேவையேற்படின் அனைத்து கட்சிகளையும் ஒருங்கி ணைத்து கூட்டம் நடத்தவும், மருத்து வர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கான நடவடிக்கை களையும் மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள் ளும். மருத்துவர்களுக்கு ஆதரவாக பிற தொழிற்சங்கங்கள் இயக்கம் நடத்த வைக்க தேவையான முயற்சி களை செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.