சென்னை, ஜூலை 19- எம்.பி.பி.எஸ்., படித்தபின்பு, தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்படு வதை ஏற்க முடியாது என்றும் மக்கள வையில் இதற்கான மசோதாவை எதிர்த்து, அதிமுக வாக்களிக்கும் என் றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில் சேர, நீட் நுழைவுத்தேர்வு நடத்துவது போல், 6 ஆண்டுகள் எம்பிபிஎஸ் படிப்பு முடிந்த தும், அவர்களுக்கு எக்சிட் எனப்படும் தேசிய அளவில் தகுதி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான தேசிய மருத்துவ கழக சட்ட மசோ தாவை மக்களவையில் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டப்பேர வையில் வெள்ளியன்று(ஜூலை19) கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர்,“ தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலத்தின் உரி மைகளை பறிக்கும் வகையில் உள் ளது. எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்க ளுக்கு கடைசி வருடம் மத்திய அரசு தேசிய தகுதித் தேர்வு நடத்தும் என்பது அபத்தமானது. இது கூட்டாட்சி தத்து வத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாகும். மருத்துவக் கல்லூரிகளை நடத்துவது மாநில அரசின் உரிமை என்பதை வலி யுறுத்த வேண்டும். மத்திய அரசின் அந்த மசோதாவை அதிமுக எதிர்க்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “எதிர்க் கட்சித் தலை வர் கூறியதில் எந்த மாறுக் கருத்தும் கிடை யாது. அதனால்தான், 2016 ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது மாநில அரசின் உரிமையை பாதிக்கும் என்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக உள்ளது என்பதாலும் எதிர்ப்பை பதிவு செய்தோம்” என்றார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அரசு நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் கொண்டு வந்தி ருக்கும் இந்த மசோதாவில் புதிய சரத்துக்கள் சேர்த்திருந்தாலும் அது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயல் என்பதால், இதனை ஏற்க முடி யாது எனவும் கூறினார். மேலும் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து வரும் மாணவர்க ளுக்கு வேண்டுமானால் எக்சிட் தேர்வு நடத்தலாம் எனவும், மக்களவையில் அதிமுக எம்பிக்கள் இந்த மசோதா வுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன், எதிர்த்தும் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள் ளார்.