சென்னை, அக். 26 - மூத்த பத்திரிகையாளர் எஸ்.திருநாவுக்கரசு வெள்ளி யன்று (அக்.25) காலமானார். அவருக்கு வயது 52. தினமணி, தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றிய திருநாவுக்கரசு நியூஸ் 18 தொலைக் காட்சியின் மூத்த ஆசிரியர்க ளில் ஒருவராக பணியாற்றி வந்தார். அந்த தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளரான அவர், அலுவலகத்தில் பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். சென்னை மந்தைவெளியில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பி னர் சி.மகேந்திரன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி எம்எல்ஏ, மதிமுக செய்தி தொடர் பாளர் வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் ஊடகவியலாளர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
எடப்பாடி-ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, புதுச்சேரி முதல மைச்சர் நாராயணசாமி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹி ருல்லா, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, ரவிக்குமார் எம்.பி., தமிமும் அன்சாரி எம்எல்ஏ, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டு ஏராளமானோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்னாரது உடல் அவரது சொந்த ஊரான உடுமலையை அடுத்த எரிசினம்பட்டிக்கு சனிக்கிழமையன்று (அக்.26) கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. ஞாயிறன்று (அக். 27) காலை 10.30 மணியளவில் உடுமலைப்பேட்டை மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.