மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த கல்விக் கொள்கை ஒரு சனாதன கல்விக் கொள்கையாகும். ஒரு சிலர் மட் டுமே கல்வி பெற முடியும் என் பதையே உள்நோக்கமாகக் கொண்ட கல்விக்கொள்கை யாகும் இது. ஒடுக்கப்பட்ட மக்க ளின் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்கு இது மிகப்பெரிய தடை யாக விளங்கப் போகிறது. ஆரம்ப கல்வியிலேயே ஏராளமான மாணவர்களை இடைநிற்றல் செய்ய போகிறது. பத்தாம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்கள் கூட தங்க ளது படிப்பை தொடர முடியாது. அதற்கான சூட்சுமங்க ளைக் கொண்டுள்ள இந்த கல்விக்கொள்ளை சட்டமாக மாற்றப்பட்டால் மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் அதிக அளவில் இடையில் நின்று போவார்கள். வெகு மக்களை கல்வியிலிருந்து விலக்கி வைக்கிறது.
-ரவிக்குமார் எம்.பி., விசிக.