tamilnadu

img

கோவையின் அமைதியை திட்டமிட்டு ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி சீர்குலைக்கிறது

கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோயம்புத்தூர். மார்ச் 13–  திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கி கோவையின் அமைதியை சீர்குலைக் கும் ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி அமைப்பினர் மீது கடும் நட வடிக்கையை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணை யரை சந்தித்து கே.பாலகிருஷ்ணன் புகார் மனு அளித்தார். கோவை மாவட்டத்தில் கடந்த  ஒருவார காலமாக அடுத்தடுத்து நடை பெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. இச்சூழலில், கோவையில் நிரந்தர அமைதியை உரு வாக்க வேண்டும்; அரசியல் கட்சியினர், தொழில்முனைவோர், வர்த்தகர்கள், சமய, சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கிய சமாதானக் குழுவை உருவாக்க வேண்டும்; வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி கோவை மாநகர காவல்துறை ஆணையரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளி யன்று சந்தித்து மனு அளித்தார். 

இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய கே.பால கிருஷ்ணன் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. கோவை யில் மதவாத, மதவெறி அமைப்பு கள்,  இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திட்டமிட்டு சில வன்முறைச் சம்பவங்களை உரு வாக்குவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவும், முறையாக கட்டுப்படுத்தி ஒழுங்காக நடவடிக்கை  எடுத்து சட்டம், ஒழுங்கு பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர காவல்துறை ஆணை யரை சந்தித்து மனு அளித்து உள்ளோம்.  இதில் மாநகரத்தில் நடந்துள்ள வன்முறை சம்பவங்களை பட்டியலிட்டு, அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டதன் அடிப்படையில், காவல்துறை ஒவ்வொரு சம்பவங்களிலும்  எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் விளக்கினர். மசூதியில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு நிலை மை மோசமானது குறித்து சுட்டிக்காட்டிய போது,  கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம்.  வழிபாட்டுத்தலங் களை தாக்குவதை ஒருபோதும் அனு மதிக்க முடியாது என்றும்,  சம்பந்தப் பட்டவர்களை கைது செய்துள்ளோம்,  கூடுதலாக கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். 

மேலும், மத்திய அரசின் குடி யுரிமை சட்டத்தால் வாழ்வுரிமை பாதிக்கப் படும் என்று அச்சத்தில்  இஸ்லாமிய  மக்கள் போராடுகிறார்கள். இந்நிலை யில் இதற்கு நேர் விரோதமாக மதவெறி அடிப்படையில் நாங்களும்  குறைந்தவர்களா என்று இந்து முன்னணி யினர் நடத்துகிறார்கள். பாதிக்கப் பட்டவர்கள் நடத்தும் போராட்டத்தை யும், எதிர்மறையாக ஆர்ப்பாட்டத்தை போராட்டம் என்கிற பெயரில் வன்முறை தூண்டுவதை சமமாகப் பார்க்கக்கூடாது என காவல்துறை யினரிடம்  தெரிவித்துள்ளோம். கோவையில், 1996க்குப் பிறகு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் இடங்களை தீர்மானித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டு வருகிறது. ஆனால், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு மட்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காத இடத்திற்கு காவல்துறை அனுமதிப்பது என்ன நியாயம் என்று கேட்டோம். இதற்கு காவல்துறை அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. இவர்கள் நடத்திய ‘பந்த்’ அறிவிப்பால் வியாபாரிகள் தங்களது சொத்துக்கு பாதுகாப்பற்ற நிலை உரு வாகுமோ என்கிற அச்சத்தில் கடை களை மூடினர். இதனை தங்களுக்கான  ஆதரவு என்று பந்த் நடத்துவோர் நினைத்துக் கொள்கின்றனர்.  ஆகவே, கோவையில் நிரந்தர அமைதி உருவாக வேண்டும். இதற்கு அமைதிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்குழுவில்  அரசியல் கட்சிகள், வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், சமய, சமூக பிரதிநிதிகள்  என பல தரப்பட்டவர்களை அழைத்து, நிரந்தர மான அமைதியை ஏற்படுத்தவும், அச்சமில்லாத சூழ்நிலையை உருவாக்கவும்  வேண்டும்.

மேலும், என்.பி.ஆர் இல்லை என்று தமிழக அரசு சொல்லியிருந்தாலும், அந்த அறிவிப்பு நிரந்தரமானது என்று சொல்லிவிட முடியாது.  நாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேசிய  மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவை  நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது சிறு முன்னேற்றம் தான். மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே அரசு இதனைக்கூட அறிவித்துள்ளது. இல்லையென்றால் இதனையும் அறிவித்திருக்காது.  ஆனால் இதனை நிரந்தரமாக்கும் வரை மக்களுக்கு நம்பிக்கை வராது. இவ்வாறு அவர் கூறினார். காவல் ஆணையருடனான சந்திப்பின்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமுர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன், சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.