தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திடமிருந்து வந்த தகவலினடிப்படையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு, சின்னங்களை பங்கிட்டு அளித்தல் தொடர்பான அரசாணையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. இப்பணியானது அக்டோபர் 15 தேதிக்குள் முடிவடையும் நிலையில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.