tamilnadu

img

நவம்பர் வரை ரேசனில் இலவச அரிசி

சென்னை:
தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-மே, ஜூன்,  ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் மாதம் வரை ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும்.  ஏற்கனவே அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படும்.ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும். பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.