tamilnadu

img

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி போராட்டம்

ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்க புகாரை விசாரிக்க

சென்னை, நவ.5- ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (நவ.5) சென்னை எழிலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்து பழிவாங்கக் கூடாது, தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளவர்களை ஆண்டுக் கணக்கில் அதே நிலையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும், குறிப்பாக, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வணிக வரித்துறை போன்றவற்றில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் கோப்புகள் மீது தீர்வு காண வேண்டும்,

விசாரணை முடிவுற்ற இறுதி ஆணைக்காக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது துறைத் தலைவர்கள் விரைந்து உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நெ.இல. சீதரன், “ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் ஒரு குற்றச்சாட்டு சுமத்தி தற்காலிக நீக்கம் செய்யப் படுகிறார். 10  ஆண்டுகளாகியும் அந்த புகார் மீது முடிவெடுக்காமல், ஒய்வூதி யம் வழங்காமல் உள்ளனர். இதுபோன்று ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். இதுபோன்ற புகார்கள் குறித்து விசாரித்து குறிப்பிட்ட காலத்தில் வழக்கை முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரி டம் மனு அளித்துள்ளோம். அதன்மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம்” என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதியம்

இந்தப் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, “புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுள்ள சில ஆயிரம் பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு ள்ளது. அந்தத் தொகையும் முதி யோர் ஓய்வூதியம் என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டு ள்ளது. இதனால் சுமார் 6.50 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்” என்றார். “நவ.7 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடை பெறுகிறது. அந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீதான முடிவு எடுக்காவிடில் மீண்டும் ஜாக்டோ-ஜியோ களத்தில் இறங்கும்” என்று எச்சரித்தார். போராட்டத்தில் ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் என். ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் கி. இளமாறன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க  மாநில பொதுச் செயலாளர் ச. பாரி, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொதுச் செயலாளர் பா. ரவி, ஓய்வு பெற்ற வணிகவரி பணி யாளர் சங்க செயல் தலைவர் சுப. வைத்தியநாதன் உள்ளிட்டோர் பேசினர்.