சென்னை, மார்ச் 31- அத்தியாவசிய தேவைக ளுக்கான ‘பார்சல்’களை எடுத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவைகள் 24 நாட்க ளுக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனால் சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்றி யமையாத தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட் களை சிறிய ‘பார்சல்’களாக எடுத்து செல்ல, சிறப்பு ‘பார்சல்’ ரயில்கள் இயக்கப் படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிற இந்த காலகட்டத்தில், எந்த ஒரு தடை இல்லாமல் சீராக, சரக்குகள் மற்றும் இன்றிய மையாத பொருள்கள் வினநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தடையில்லா ‘பார்சல்’ ரயில் சேவைகள் வழங்கப்படுகி றது. இது பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்க ளையும், சரக்குகளையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் மருந்து பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், முகக்கவ சங்கள், உணவுப் பொருள் கள் முதலான இன்றியமை யாத பொருள்களை சிறிய பார்சல்களாக எடுத்து செல்வது மிகவும் முக்கியம். இந்த மிக முக்கியமான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் ரயில்வே உத்தரவின் பேரில் தெற்கு ரெயில்வே சிறப்பு ‘பார்சல்’ ரயில்களை இயக்குகிறது. அத்தியாவசிய பொருட் களை ‘பார்சல்’ மூலம் கொண்டு செல்வதற்கு ரயில்வேயில் உள்ள ‘பார்சல்’ அலுவலகங்களில் முன்பதிவு செய்து கொள்ள லாம். இந்த ‘பார்சல்’ சேவைக்கு ஏற்கனவே இருக்கும் கட்டண விதிமுறைகளின் கீழ் ‘பார்சல்’ மற்றும் சரக்கு கட்டணம் வசூல் செய்யப்படும்.