சென்னை,ஜன.10- மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். அந்த வகையில் தனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர்களுக்கான பிரதிநிதித் துவத்தை நீக்குவது தொடர்பான மத்திய அரசின் மசோதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆங்கிலோ இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அதிமுக நிலைப்பாட்டை மாநிலங்களவையில் கூறியிருப்பதாகவும், தொடர்புடைய அமைச்சகம் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.