tamilnadu

img

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.64 கோடி ஒதுக்கீடு

சென்னை ஏப்.15- கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 64 கோடியே 27 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்து வருவாய்துறை அர சாணை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தீய ணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்காக 680 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என மாநில பேரிடர் நிவா ரண துறையிடம் கோரிக்கை வைத்தன.

இதைத்தொடர்ந்து தற்போது, சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு தலா 20 கோடியும், தீயணைப்புத் துறைக்கு 15 கோடியே 92 லட்சமும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்க ளுக்கான உதவித் தொகையாக 8 கோடியே 35 லட்ச ரூபாயும் வருவாய்த் துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.