சென்னை, மார்ச் 13- சட்டப்பேரவை வளா கத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தலைமைச்செயலக வளாகம் ஆகிய இடங்க ளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி வெள்ளி யன்று (மார்ச் 13) நடை பெற்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து விமா னத்தில் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்படு கிறது. இதில் கொரோனா அறி குறி தெரிந்தால் அவர்களை சிறப்பு பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பரவாமல் தடுக்க பேருந்து, ரயில் நிலையங்களில் கண்கா ணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதி யாக சட்டப்பேரவை வளா கத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தலைமைச்செயலக வளாகம் ஆகிய இடங்க ளில் 20க்கும் மேற்பட்ட மாநக ராட்சி சுகாதார பணியா ளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் வெள்ளி யன்று (மார்ச் 13) ஈடு பட்டனர்.