சென்னை, டிச. 11- தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதி மன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி மாநக ராட்சிக்குட்பட்ட கோனாம்பேடு பகுதியில் குளங்க ளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் கடந்த ஆண்டு அக்கிராம பொது நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்த ரவு அமல்படுத்தப்படாததால் மாவட்ட நிர்வாகத் திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொட ரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமி ழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாகவும், தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்ச ரித்தனர்.