திருச்சி, ஆக. 22- மத்திய பாஜக அரசின் நாசகர கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், திருச்சியில் ஆகஸ்ட் 23 (இன்று) மாபெரும் கல்வி உரிமை மாநாட்டினை நடத்துகிறது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் காலை 9 மணி முதல் இரவு வரை நடைபெறும் இம்மாநாட்டில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி, புதுச்சேரி முதலமைச்சர் வே.நாராயணசாமி, முன்னாள் கே.என்.நேரு, திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி., காங்கிரஸ் சார்பில் திரு நாவுக்கரசர் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வி.சி.க பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் மற்றும் கல்வியாளர்கள், வரலாற்ற லாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கின்ற னர்.
மாநாட்டையொட்டி கல்வி வளர்ச்சி கண்காட்சி, சுவரொட்டி கண்காட்சி, புத்தக கண்காட்சி, நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்வு களும், கலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.