சென்னை, அக்.26- கரும்பு விவசாயிகளுக்கு தேவை யான கடன் உதவிகளை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமையன்று கடி தம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடன் நிலுவையில் இருந்தாலும் விவ சாயிகளுக்கு மேலும் கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 4 லட்சம் கரும்பு விவசாயிகளை பாது காக்க தனிகவனம் செலுத்த வேண்டும். 34 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கரும்பு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்த 68 கோடியே 35 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது என்றும், அரசு மற்றும் வங்கி நிர்வாகிகளை உறுப்பினர்களாக கொண்டு சர்க்கரை ஆலை சீரமைப்புக்குழு அமைக்கப் பட்டுள்ளதையும் முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார். 2018-19ஆம் ஆண்டில் கரும்பு மெட்ரிக் டன் ஒன்றிற்கு 137 ரூபாய் 50 காசுகள் வீதம், 200 கோடி ரூபாய் அளவிற்கு, கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங் கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள் ளார்.