பெங்களூரு, டிச.24- மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆவேசமான போராட் டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் கர்நாடகத்தில் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம் திறக்கப்பட்டுள்ளது.இந்தி யாவில் தடுப்பு முகாம்கள் ஏதும் இல்லை என்று சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறி யிருந்தார். இந்நிலையில் கர்நாடகத்தில் முதல் தடுப்பு முகாம் திறக்கப்பட்டுள்ளது என்பது பிரதமர் பேசியதை பொய் யாக்கியுள்ளது. பெங்களூரில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நீலமங்கலா என்ற இடத்தில் திறக்கப் பட்டுள்ள இந்த தடுப்பு முகாமில் 24 பேர் தங்கமுடியும். முகாமில் 6 அறைகள் உள்ளன.