tamilnadu

img

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ஜன. 21 வரை கால அவகாசம்

சென்னை, ஜன. 13- அரிசி ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு 1,000 ரூபாயுடன், பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 9ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் வாங்கிச் செல்ல வசதியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு திங்கட்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு வாங்காதவர்கள், ஜனவரி 21ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பிறகும் பொங்கல் தொகுப்பை பெறலாம்.