அக்டோபர் 10 மறியல்; மின் ஊழியர் மாநாடு அறைகூவல்
திருநெல்வேலி, ஆக.20- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 72 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் பெற்றுத்தந்த மின் ஊழியர் மத்திய அமைப்பு, தற்போதுள்ள பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அக்டோ பர் 10ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் (சிஐடியு) மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்துக்கு மூத்தத்தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அமைப்பின் மாநில பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், “மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஒரு நாடு, ஒரே மின் தொகுப்பு’ என மின்சார வாரி யத்தில் கைவைத்துள்ளார். மின்சாரம் தனியார் மயமாக்கப்பட்டால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் இருக்காது என்பதை விவசாயிகளுக்கு விளக்க இந்த மாநாடு நமக்கு கட்டளையிட்டிருக்கிறது” என்றார்.
நவம்பர் மாதம் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சிறு தொழில் நிறு வனர்கள், விவசாயிகளை திரட்டி கருத்த ரங்கம் நடத்த மாநாடு முடிவு செய்து ள்ளது. நிரந்தர தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 6ஆம் தேதி தமிழகம் முழு வதும் வட்ட மேற்பார்வை பொறியா ளர் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் நிரந்தரம்கோரி அக்டோபர் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் காலைவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் மாநாடு முடிவு செய்துள்ளது என்றும் அவர் அறிவித்தார்.