tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வரலாற்றுப் பிழையை சரி செய்யுங்கள்!

தமிழக முதல்வருக்கு கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

தேனி, பிப். 14- குடியுரிமை சட்டத்திருத்தத்தை   அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்  ஆதரித்தன் மூலம் ஏற்பட்ட வரலாற்றுப் பிழையை, சரி செய்யும் விதமாக  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக  பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது : உலக வரலாற்றில் குடியுரிமையை மத அடிப்படையில் புகுத்தியது மோடி அரசாகத் தான் இருக்கமுடியும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் பூடான், இலங்கை, பர்மா ஆகிய நாடுகளை இணைக்க வேண்டும் என்று  திருத்தம் கொண்டு வந்தன. ஆனால் பாஜக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.  இதை நிறைவேற்றி இருந்தால் தமிழகத்தில் அகதிகளாக வாழும் 1. 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெற்றிருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக துரோக சட்டத்தை நிறைவேற்ற அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் துணை நின்றுள்ளன.  மாநிலங்களவைக்கே செல்லாத பாமக உறுப்பினர் அன்புமணி ராம தாஸ் இதற்காக மட்டும் வாக்களிக்க சென்றார். 

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு  எதிராக வலுவான போராட்டம் நடைபெற்று வரு கிறது.  கேரள மாநிலம் இதற்கு முன் உதாரண மாக இருக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள கவர்னரையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசவைத்து மகத்தான முதல்வராக விளங்குகிறார் பினராயி விஜயன். அதன் பின் பல்வேறு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் இது குறித்த தீர்மானத்தை தாக்கல்  செய்துள்ளார். தமிழக முதல்வரும் நியாயத்தின் பக்கம் நின்று தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். 

இந்துக்களுக்கும்  எதிரான ஆட்சி

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை 10,300 விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 97 சதவீதம் பேர் இந்துக்கள். மத்திய நிதிநிலை அறிக்கையில் 8 லட்சம் கோடி ரூபாய் பற்றாக் குறை காட்டப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை, சுகா தாரம், தூய்மை பாரத இயக்கம், உணவு மானி யம் உள்ளிட்டவற்றுக்கு பல ஆயிரம் கோடி  குறைக்கப்பட்டுள்ளது. லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசி, பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நோக்கில் பங்குகளை விற்க முடிவு செய்துள்ள னர். பெருமுதலாளிகள் வாங்கியுள்ள கடன்கள் 2. 17 லட்சம் கோடி ரூபாய் வரை மோடி அர சால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் கம்பம் ஏரியா செயலாளர் ஜி. எம். நாகராஜன் தலைமை  கித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே. ஆர்.  லெனின் வரவேற்று பேசினார். மாவட்ட செய லாளர் டி. வெங்கடேசன் தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திவரும் அத்துமீறல் குறித்து பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி உள்ளிட்டோர் உரை யாற்றினர்.  கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. ராஜப்பன், ஏ. வி. அண்ணாமலை, எல். ஆர். சங்கரசுப்பு, டி. கண்ணன். கே. தயாளன். எம். ராமச்சந்திரன், இடைக்கமிட்டி செயலாளர்கள் கே. எஸ். ஆறு முகம், சி. சடையாண்டி, எஸ். ராமர், எஸ். செல்வம், சி. வேலவன், எம். வி. முருகன், ஏ. முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  காஜா மொய்தீன் நன்றி கூறினார்.

நிதியளிப்பு

கூட்டத்தில், கே.பாலகிருஷ்ணனிடம் கட்சி யின் ஏரியா செயலாளர் ஜி.எம்.நாகராஜன், கட்சி  வளர்ச்சி நிதி ரூ. 7லட்சத்து 3 ஆயிரத்து 429 அளித்தார்.

முஸ்லீம் பெண்கள் போராட்டத்திற்கு ஆதரவு

கம்பம் மெட்டு சாலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெண்கள் இரவு நேரத்தில் முழு நேர தர்ணாவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களை மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் நேரில் சென்று ஆதரவு தெரி வித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே. பால பாரதி, மாவட்ட செயலாளர் டி. வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.            (ந.நி.)