மதுரை,ஜன.23- தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத் தின் சகோதரர், ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆவின் விதிகளை மீறி நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக பழனிசெட்டிப்பட்டி யைச் சேர்ந்த அமாவாசை என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே புதிய உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்தி ரன் அமர்வு, ஆவின் விதிப்படி உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்படாததால், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். மேலும் விதிகளை பின்பற்றி தற்காலி கக் குழுவையோ, நிரந்தரக் குழுவையோ அமைப்பது குறித்து ஆவின் ஆணையர் முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.