tamilnadu

img

வெளி மாநிலத்தில் இருந்து வந்த மகனை மாட்டு கொட்டகையில் தங்க வைத்த தாய்... அச்சத்தில் கிராம மக்கள்

சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரங்கநாதபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் மும்பை யில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடன் மதுரையை சேர்ந்த மற்றொரு வாலிபரும் வேலை செய்கிறார். இந்நிலை யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னர் அவர்களால் மும்பை பில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வர முடியவில்லை .இ ந் நிலையில் மும்பையில் இருந்து காய்கறி ஏற்றி செல்லும் லாரி மூலம் சேலம் வந்தனர் பின்னர் அங்கிருந்து மதுரை நோக்கி சென்ற மற்றொரு லாரியை பிடித்து திங்களன்று சொந்த ஊருக்கு திரும்பினர்.

வாலிபர் பெலிக்ஸ் இமானுவேல்   தனது பெற்றோருக்கு தான் திண்டுக்கல் வந்து விட்டதாக தெரிவித்தார். அப்போது அவரது தாய் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்த பின்னர் தான் வீட்டிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தார் மருத்துவமனை செல்வதற்காக தனது வீட்டில் இருந்த 2 வது மகனை இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனை செல்லாமல்  தனது தம்பியுடன் நேராக வீட்டிற்கு வருவதை பார்த்த தாய்வாவாசலிலேயே இருவரையும் தடுத்து நிறுத்தி  மும்பையில் தான் கொரனோ வைரஸ் அதிகமாக இருக்கிறது. நீ வீட்டுக்குள் வரக்கூடாது என்று அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்தார் . இரு சக்கர வாகனத்தில் அண்ணனுடன்  வந்ததால்  தம்பியையும்  மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்தார். திங்கள் இரவு முழுவதும் மாட்டுக் கொட்டகையில் இருவரும் தூங்கி னார்கள் செவ்வாயன்று காலை இருவரையும்  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதிக்கும்  கொரோனோ தொற்று வந்து விடுமோ என்று அச்சத்தில் உள்ளனர் - ந.நி