சென்னை, டிச. 14- உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 9-ம் தேதி ஆரம்பித்து நேற்று வரை 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள் ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் இறுதித் தேதி டிச.19ஆம் தேதி ஆகும். தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளின் வேட் பாளர்கள், சுயேச்சைகள் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். வெள்ளிக் கிழமை (டிச.13) வரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக வேட்பாளர்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யும் நடைமுறையும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு வில் கிராம, ஊராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு 75,170 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 26,245 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னர் பதவிக்கு 7659 பேரும், மாவட்ட வார்டு உறுப்பி னர் பதவிக்கு 704 பேர் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மொத்தமாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். டிச.27, 30 தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவ டையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். சனிக்கிழமையும் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெகு சிலரே மனுத்தாக்கல் செய்தனர்.