சிதம்பரம், ஜூன் 28- கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் கிராமத் தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி, “இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. இதனால் குடிப்ப தற்கு தண்ணீர் இல்லை” என்றார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் பஞ் சாயத்துராஜ் சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு செயல்படுகிறது. ஊராட்சிகளில் உள்ள பிரச்சனைகளை விரைவாக தீர்க்க உடனடி யாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண் டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும் பாலான பொது மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குடிநீர் தட்டுப் பாட்டை சரி செய்ய வேண்டும் என்றும் வலியு றுத்தியதோடு தீர்மானமும் நிறைவேற்றினர். இதே போன்று மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடை பெற்றது. இதில் ஹைட்ரோகார்பன் திட் டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தீர்மா னம் இயற்றியுள்ளனர்.