tamilnadu

img

காவிரிப் படுகையை பாதுகாத்தே தீருவோம்

நாகப்பட்டினம், ஜுன் 9- காவிரிப் படுகையை பாதுகாத்தே  தீருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் சூளுரைத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்  கள் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எழுச்சிமிக்க பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிபிஎம் சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தலைஞாயிறு ஒன்றியம், வெள்ளப் பள்ளத்தில் துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், மத்திய மாநில அரசுகள், பன்னாட்டு முதலாளி களை வளர்க்கவும் தங்கள் சுயலாபத்திற் காகவும் கொடிய திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் எட்டு  வழிச் சாலைத் திட்டத்தையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், நாங்கள், இந்த மண்ணையும் மக்களை யும் நீர் வளத்தையும் காத்திட இப்படிப்பட்ட போராட்டங்கள் நடத்து கிறோம் என்றார். ‘‘வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங் களுக்கு டெல்டா மாவட்டங்களிலும் பிற பகுதிகளிலும் 340 கிணறுகள் தோண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 270 கிணறுகள் வேதாந்தா நிறு வனத்திற்கும், மீதிக் கிணறுகள் ஓ.என்.ஜி.சிக்கும் ஆகும். ஒரு கிணறு தோண்டப்படும் போது, 3000 அடிக்கு மேல் ஆழத்தில் தோண்டப்பட்டு பக்க வாட்டில் பல துளைகளிட்டும், பூமி யின் உள்ளேயுள்ள பாறைகளை வெடி வைத்துப் பிளந்து பிறகு தான் எண்ணெய் எடுப்பார்கள். இப்படி பூமியைத் துளையிட்டும், பிளந்தும் எண்ணெய் எடுக்கும் போது, நிலத்தடி நீர் வீணாகி விடும், ஆழமான துளை கள் வழியே கடல்நீர் உள்ளே புகுந்து, நீர் வளம் முற்றிலும் நாசமாகும். 

பின்னர், இந்த பூமியில் நீரும் இருக்காது. எதுவும் விளையாது. நிலம் பாலையாகிவிடும்’’ என்று விவரித்த பெ.சண்முகம், ‘‘இந்தப் பேராபத்தை உணர்ந்த ஜெயலலிதா, 2013 அக்டோபரில் இந்தத் திட்டத்திற்குத் தடை உத்தரவு பிறப்பித்தார். ‘அம்மா வின் ஆட்சி’ எனச் சொல்லும் தற்போதைய அதிமுக ஆட்சியாளர்கள் எப்படி இதனை ஆதரிக்கிறார்கள்? தடை  உத்தரவு போடப்பட்ட பின்னர், மத்திய அரசு எப்படி இதனை மீண்டும் செயற்படுத்தத் துடிக்கிறது?’’ எனவும் கேள்வி எழுப்பினார். ஜூன் 8 அன்று ‘நெல் திருவிழா’வில், அமைச்சர் காமராஜ், ‘மக்களுக்கு எதி ரான திட்டங்களை நாங்கள் அமல் படுத்த மாட்டோம்’ என்று கூறினார். நெற்களஞ்சியமாம், காவிரிப் படுகை யை அழித்து விட்டு, சோற்றுக்கு என்ன  செய்யப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய பெ.சண்முகம், ‘‘நாங்கள் காவிரிப் படுகையைக் காப்பாற்றப் போராடுகிறோம். ஜூன் -11ல் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜூன் -15 அன்று, விழுப்புரத்திலிருந்து, இராமநாதபுரம் வரை மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.  ஜூன் -18ல் தஞ்சையில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின், அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமாகும். எப்படி யேனும் இந்த மண்ணையும் மக்களை யும் நீரையும் காப்பாற்றுவோம்’’ எனச் சூளுரைத்தார்.          (ந.நி.)