சாத்தான்குளம், ஜூலை 6- சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து சென்று காவல் நிலையத்தில் துன்புறுத்தி, சித்ரவதை செய்து கோவில்பட்டி கிளை சிறைசாலையில் அனுமதிக்கப்பட்டு மரண மடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தின ரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறு தல் கூறினார்.
மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கே.பி.ஆறுமுகம், ஆர்.ராகவன், ஆர்.பேச்சி முத்து, எஸ்.அப்பாத்துரை, தா.ராஜா, தி.சண்முக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தி.சீனி வாசன், பி.பூமயில், ஏ.பாலகிருஷ்ணன், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் கு.ஜெய பால், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் சி.ரவிச்சந்திரன் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.நம்பிராஜன், உடன்குடி ஒன்றிய செயலாளர் வி.ஆறுமுகம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பி.முத்துக்குமார் ஆகியோர்கள் சென்றனர்.
ஜெயராஜ் நடத்தி வந்த ஏபிஜே செல்போன் கடையை நேரில் பார்வையிட்டு அங்கிருந்த வணிகர்களிடமும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை யில் தொடர்புடைய காவல்துறையினர் அனை வர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இந்த வழக்கு முடிந்து குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை கிடைக்கும் வரை கைது செய்யப்பட்டுள்ள காவல் துறையினருக்கு ஜாமீன் வழங்காத வகையில் சிபிசிஐடி போலீ சார் செயல்படவேண்டும். இந்த கொலையில் தொடர்புடைய ப்ரண்டஸ் ஆப் போலீஸ் இது வரை கைது செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் உரிய மருத்துவ பரிசோதனை செய்யாமலும், சிகிச்சை அளிக்காமலும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருடைய உடல்நிலை குறித்து உரிய ஆய்வு செய்யாமல் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பட்டி கிளை சிறை துறை அதிகாரி களும், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரு வரின் உடல்நிலையை கணக்கில் எடுக்காமல் சிறையில் அடைத்தது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யெச்சூரி ஆறுதல்
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி தொலைபேசியில் ஜெயராஜ் மகள் பெர்ச்சியாவிடம் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார். குற்றம் செய்த காவல் துறையினருக்கு தண்டனை கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் எனவும் தெரிவித்தார்.