விவசாயிகள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
சென்னை, ஜூலை 20- விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஜூலை 27ல் நடைபெறவிருக்கும் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்துக்கு சிபிஐ(எம்) முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய பிஜேபி அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்க ளுக்கு விரோதமான சட்டங்களை யும் திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசர சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொது முடக்கத் தால் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உருப்படியான நிவாரண உதவிகள் எதையும் செய்ய வில்லை. மாறாக, மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. குறிப்பாக, மின்சார திருத்த சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வருமா னால் விவசாயத்திற்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், குடிசைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார சலுகை பறிபோகும்; மின் வினியோகத்தில் தனியார் நிறு வனங்களை அனுமதிப்பதுடன் ஆண்டுதோறும் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்படும்.
அந்நியக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக...
அதேபோல், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, விவசாயி களுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள் ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான உணவு தானி யங்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெரும் கம்பெனிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப் பாட்டை ஏற்படுத்தி அபரிமிதமான விலைக்கு விற்கும் நிலை ஏற்படும். இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பொருட் களை வாங்க முடியாமல் பட்டினி கிடக்க நேரிடும், விவசாய விளை பொருட்களுக்கு அரசு விலையை தீர்மானித்து கொள்முதல் செய்வ தற்கு பதிலாக கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பி இருக்க வேண்டிய அவலநிலைக்கு விவ சாயிகளை தள்ளி இருக்கிறது இந்த சட்டம். ஒப்பந்த சாகுபடி என்ற பெயரில் அன்னிய கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்திய விவசாயத்தை மாற்ற மத்திய அரசு இதன் மூலம் வழிவகுத்துள்ளது.
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்துக்கு ஒத்துழைப்பு நல்குக!
எனவே, மக்களின் வாழ்விலும் விவசாயத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மேற்படி அனைத்து சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வீடுகள்தோறும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் இம்மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமை யான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சி அணி கள் முழுமையாக பங்கேற்று வெற்றி அடையச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. “பொது மக்களின் ஆதரவை திரட்டும் விதமாக நடை பெறும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தையும் முழுமையாக நிறைவேற்ற பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கு மாறும் வேண்டிக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.