சென்னையில் தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டம்
சென்னை, ஜூலை 24- அரசாணைப்படி ஊதி யம் வழங்க கோரி வெள்ளி யன்று (ஜூலை 24) சென்னை யில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் ஒவ் வொரு போக்குவரத்து கழக மேலாண் இயக்கு நர்களுக்கும் கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி ஊழியர்கள் மிஸ்டு கால் கொடுத்து நூதன வடிவ போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகங் கள் கடந்த மே, ஜூன் மாதங்களில் தொழிலாளர்க ளின் விடுப்பை கழித்துக் கொண்டு ஊதியம் வழங்கின. விடுப்பில்லாவிடில் சம்பளம் பிடித்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் நிர்வா கங்கள் ஈடுபட்டன. இத னைக் கண்டித்து தொழிற்சங் கள் போராட்டம், பேச்சு வார்த்தை நடத்தியும் ஊதிய பறிப்பு தொடர்கிறது.
இதனையடுத்து அரசா ணைப்படி ஊதியம் கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல் லவன் இல்லம் அருகே உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இதில் ஏ.ஆறு முகநயினார், வி.தயாந்தம் (சிஐடியு), தனசேகர், பழனி (எல்பிஎப்), ஆறுமுகம் (ஏஐடி யுசி), அர்ச்சுணன் (ஏஎஎல் எப்), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), நாகராஜ (டிடிஎஸ்) உள்ளிட்டு 9 சங்கத் தலைவர்கள் உண்ணா நிலையை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தை தொமுச பொதுச் செயலா ளர் கி.நடராஜன் தலைமை யில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன (சிஐடியு) துணைத்தலைவர் எம்.சந்தி ரன் தொடங்கி வைத்தார்.
ரூ.60 ஆயிரம் வரை இழப்பு
அப்போது செய்தியா ளர்களிடம் கி.நடராஜன் கூறியதாவது: போக்குவரத்து கழகங் கள் ஊழியர்களின் விடுப்பு களை கழித்து ஊதியம் வழங்கியது. கடந்த 4 மாதத் தில் ஒவ்வொரு தொழிலாளி யிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாயை நிர்வாகங்கள் பறித்துள்ளன. விடுப்பு இல்லை என்றால் அந்த தொழிலாளியிடம் 10 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய பிடித்தம் செய்கிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட தொழிலாளி தனியார் மருத்துவமனையில் 4.50 லட் சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டு, திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. அரசு ஓமந்தூரார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றால் 6 ஆயிரம் ரூபாய் வசூ லிக்கிறார்கள். இந்த தொகை யையும் நிர்வாகம் தர மறுக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தினால் அது போக்குவரத்து ஊழி யர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள். அரசு ஊழியர் இறந்தால் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கேட்டால், பொருந்தாது என்கிறார்கள். நிர்வாகங்கள் ஏன் இத்தகைய போக்கை கடைபிடிக்கின்றன? நிர்வா கங்கள் மொத்த ஊதியத்தை வழங்காமல், நிகர ஊதி யத்தை மட்டுமே வழங்குகின் றன. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இந்தப் போராட்டம் நடை பெறுகிறது. போக்குவரத்து தொழி லாளர்களில் சுமார் 200 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, 2 பேர் இறந்துள்ள னர். அரசு மருத்துவமனை யில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும், உயிரி ழந்தால் 50லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தை ஆதரித்து எல்பிஎப் தலைவர் சுப்புராம், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை செய லாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்வுடன் காணொலி வாயிலாக தலைவர்களு டன் பேசினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.