மதுரை,ஏப்.25- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலையின்றி, உணவின்றி சிரமப்பட்டு வந்த மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காட்டுநாயக்கர் சமூக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியக்குழு சார்பில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டக்குழு உறுப்பினர்கள் து.ராம மூர்த்தி, கே.முருகேசன் ,ஒன்றியக்குழு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.