சென்னை, ஆக.26- அரசு மருத்துவர்களின் போராட் டத்திற்கு அரசு தீர்வு காணா விடில் அரசியல் கட்சிகள் அப் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் எச்ச ரித்தார். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகள் எண்ணிக் கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், பட்டமேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக் காடு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதன்மீது அரசு உரிய நடவ டிக்கை எடுக்காததால் ஆக.23 முதல் சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மருத்து வர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வரு கின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு மருத்துவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன். போராட்டக்களத்திற்கு வந்து மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் மேற்கண்ட எச்ச ரிக்கையை விடுத்தார். மேலும் சிகிச்சை பெற்று வரும் மருத்து வர்களையும் சந்தித்து வாழ்த்து தெரி வித்தார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆர்.எஸ்.பாரதி எம்.பி., (திமுக), இரா.முத்தரசன், ந.பெரியசாமி (சிபிஐ), சீமான் (நாம்தமிழர் கட்சி), ஏ.ஆறுமுகநயினார் (சிபிஎம்), இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரி வித்து பேசினர்.