tamilnadu

img

ஹிட்லர் ஆட்சி.... இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

எள்முனையளவும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சியால் ‘ஹிட்லர் ஆட்சி’ நடத்தப்படுகிறது. கோயபல்ஸ் போன்று அமித்ஷா உள்ளார். மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. ஆனால், மோடியின் பினாமி கட்சியான அதிமுக, மற்ற சில கட்சிகளின் ஆதரவில் சட்டங்களை நிறைவேற்றுகிறது. எதற்கும் கை தூக்குகிற கைக்கூலிகளாக அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர். மந்திரி பதவிக்காக ஒரு கட்சி (பாமக) அட்வான்சாக வாக்களித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா என நாடு படிப்படியாக ராணுவமயமாக்கப்பட்டு மறைமுக ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து 19ந் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர் போராட்டம். சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறும் வரை தொடரும்.