உதகை, ஜூலை 23- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத் தையும், கட்சியின் மூத்த தலைவர் களையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருபவர்களை கைது செய்யக்கோரி புதனன்று இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சென்னை தியாகராய நகர் பகு தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் தொடர் பாக புகைப்படத்தை சமூக வலை தளங்களில் சிலர் அவதூறாக பதி விட்டு, கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்து மிகவும் இழிவாக கருத்து களை பதிவிட்டு வரும் சமூக விரோ திகளை கைது செய்யக்கோரி புத னன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் பெள்ளி, மாவட் டச் செயலாளர் பொ.போஜராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன், கோத்தகிரி நகர செயலாளர் நெல்லை கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் சாஜி, பட்பயர் பத்மநாபன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஹனிஃபா மற்றும் சிபிஎம் மாவட்டசெயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் க.அன்புமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக் கங்களை எழுப்பினர்.