சென்னை, நவ. 28- வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம் பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னை யில் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ கத்தில் பரவலாக பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. புதனன்று முதல் வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் புவிய ரசன் வியாழனன்று (நவ.28) நிருபர் களிடம் கூறியதாவது:- வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரண மாக 30ஆம் தேதி (சனிக்கிழமை) டிசம்பர் 1, 2 தேதிகளில் பெரும்பா லான மாவட்டங்களில் அநேக இடங் களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங் களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங் களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 3 நாட்க ளும் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.