tamilnadu

img

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் பாக்கியை பெற்றுத்தர நடவடிக்கை

சென்னை, ஜூலை 16- தனியார் சர்க்கரை ஆலை கள் தர வேண்டிய 1,217 கோடி  ரூபாய் பாக்கித் தொகையை அரசு பெற்றுத்தர வேண்டும்,  விவசாயிகள் பெயரில் வங்கிக் கடன் பெற்று மோசடி  செய்த ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜனை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் சென்னையில் செவ்வாயன்று (ஜூலை 16) நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் பி.சண்முகம் துவக்கி  வைத்தார். கரும்பு விவசாயி கள் சங்க பொதுச் செயலாளர்  டி.ரவீந்திரன், பொருளாளர் எம்.சின்னப்பா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்  பேசினார்கள். பின்னர் விருந் தினர் மாளிகை அருகில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்  டவர்களை காவல்துறையி னர் தடுத்து கைது செய்தனர்.

இதில் மாநிலச் செயலா ளர்கள் டி.பி.கோபிநாத், சி. பெருமாள், டி.காசிநாதன், எஸ்.ஜோதிராமன், ஏ.கே. ராஜேந்திரன், ஏ.ஜானந்த னன், செ.நல்லக்கவுண்டர், ஏ.எம்.பழனிச்சாமி, டி.ஆர்.குண்டு ரெட்டியார், எம்.சக்தி வேலு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட மாநிலம் முழுவதி லும் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை 

போராட்டத்தையடுத்து சங்க நிர்வாகிகளை அரசு அழைத்துப்பேசியது. சென்னை தலைமைச் செய லகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழில் துறை அமைச்சர் சம்பத், சர்க்  கரைத் துறை ஆணையர் ரீத்தா மேத்தா தாகூர், இணை  ஆணையர், அதிகாரிகள் சங்  கத்தின் சார்பில் பொதுச் செய லாளர் டி.ரவீந்திரன், நிர்வாகி கள் பழனிச்சாமி, எம்.சின்  னப்பா, சி.பெருமாள், நல்லக்  கவுண்டர், துளசி நாராய ணன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் டி.ரவீந்தி ரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆலைகள் வைத்துள்ள 125 கோடி ரூபாய்க்கு அரசிடம் வழி வகைக் கடன் கேட்டுள் ளோம். அதற்கான கூட்டம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில்  அநேகமாக ஒப்புதல் கிடைத்து விடும். ஒப்புதல் கிடைத்தவுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அந்த  பணத்தை வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

அதேபோல் வேளாண் துறை சார்பில் நடைபெற்று வரும் கருகிய கரும்புகள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் உரிய இழப்பீடு  வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய 1,217 கோடி ரூபாய் வராது எனவும் அதி காரிகள் தெரிவித்தனர். ஆனால் அரசுதான் இதை பெற்றுத்தர வேண்டும் என  சங்கத்தின் சார்பில் வலி யுறுத்தினோம். அதேபோல் கூட்டுறவு ஆலைகள் வழங்க  வேண்டிய பாக்கித் தொகை 209 கோடி ரூபாயில் பாதி யைத் தருகிறோம் என அதி காரிகள் தெரிவித்தனர். அதற்கு முடியாது முழு பாக்கித் தொகையையும் அளிக்க வேண்டும் என வலி யுறுத்தினோம்.

கடந்த ஆண்டு மத்திய  அரசு கரும்பு டன் ஒன்றுக்கு  2,750 ரூபாய் அறிவித்தி ருந்தது. மாநில அரசு ஒரு  டன் கரும்புக்கு ரூ. 137.50 கூடுதல் விலையை வரும் தீபாவளிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்து வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். விவசாயி களின் பேரில் மோசடியாக வங்கியில் கடன் பெற்ற ஆரூ ரான் சர்க்கரை ஆலை முத லாளி ராம் தியாகராஜனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு, சட்ட  வல்லுநர்களுடன் ஆலோ சனை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் தனி யார் சர்க்கரை ஆலை உரி மையாளர்களை வரும் 24ஆம் தேதி அழைத்து பேச  உள்ளோம். அப்போது உங்க ளுடனும் பேசுகிறோம். குறிப்  பிட்ட தேதிக்குள் பாக்கியை  பெற்றுத்தர முயற்சி செய்கி றோம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக மாக காத்திருப்பு போராட்  டத்தை வாபஸ் பெறுகிறோம்.  அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்  குள் உறுதியளித்தபடி பாக்கித் தொகையை வழங்காவிட்டால் மீண்டும் போராடுவோம். இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.