tamilnadu

img

2-வது முறையாக கரைபுரளும் கொள்ளிடம் ஆறு

சீர்காழி:
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கடலை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராத தால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம்பகுதியில் பிரதான பாசன வாய்க்கால்களான புதுமண்ணியாறு, தெற்குராஜன் வாய்க்கால் மற்றும்பொறை வாய்க்கால் ஆகியவை களில் மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு நீண்ட நாட்களுக்கும் பின்னும் வராமல் இருந்தது. விவசாயிகளின் தீவிர கோரிக்கையினை ஏற்று தண்ணீர் திறந்து விடப்பட்டும் பிரதான பாசன வாய்க்கால்களில் மட்டுமே தண்ணீர் சென்று கடலில் கலந்தது. 

பாசன கிளை வாய்க்கால்கள் தூர்வாராததால் பாசனத்திற்கான தண்ணீர் கிடைக்காததால் நேரடி விதைப்பு செய்து காத்திருந்தனர். இருந்தும் பாசன கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராததால் நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் கருக ஆரம்பித்தன. பயிரைக் காக்க தண்ணீர் வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் உபரி நீர் வீணாக சென்று கடலில் கலந்தது. அதே போல் நான்கு நாட்களாக உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் சம்பா பயிருக்கு உகந்ததாக இருந்து வருகிறது. 
கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் வாடிய சம்பா பயிரை மழை நீர் காத்து வருகிறது. இதுவரை கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு போதிய அளவு பாசனத்திற்கான தண்ணீர் இதுவரை வந்து சேரவில்லை. பாசனத்திற்கான தண்ணீரும் இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. கொள்ளிடம் ஆற்றில் மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி எந்த பயனுமின்றி கடலில் கலப்பதால் கொள்ளிடம் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.