திருச்சிராப்பள்ளி, ஜூன் 10- புதுஅய்யன் வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து பாசன, வடி கால் வாய்க்கால்களை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். 2 இயந்திரங்கள் மூலம் பெட்டவாய்த்தலை தலைப்பிலி ருந்து கோவிலூர் கடைமடை வரை புதுஅய்யன் வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். நிலஅளவையாளர் மூலம் வாய்க்காலை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று முக்கொம்பு உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவரும், திருப்பராய்த்துறை ஊராட்சி தலைவருமான பிரகாச மூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி தவிச மாநில துணைத்தலைவர் முகமதலி, மாவட்ட தலைவர் கே.சி.பாண்டி யன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் வினோத்மணி, பெருகமணி ஊராட்சி தலைவர் கிருத்திகா ஆகியோர் பேசி னர். தமிழ்நாடு விவசாய சங்கத்தி னர், பொன்வயல் உழவர் மன்றத்தி னர், காவிரி மீட்புக்குழுவினர், விவ சாய மகளிர் பொறுப்புறுதிக்குழு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.