tamilnadu

img

தலித் ஊராட்சி தலைவர் அவமதிப்பு... தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சித் தலைவராக பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்ததார். அந்த மனுவில் தற்போது அதிமுக கடமலை-மயிலை ஒன்றியச் செயலாளராக(வடக்கு) உள்ள கொத்தாளமுத்து, அவரது மகன்கள் ஆகியோர் தம்மை எந்த வளர்ச்சிப் பணிகளிலும் ஈடுபட விடாமல் இடையூறு செய்து வருகின்றனர். கடந்த சுதந்திர தின விழா அன்று ஆத்தாங்கரைபட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர். இதேபோல ஊராட்சி மன்றஅலுவலகத்திற்கு சென்றால் தலைவருக்கான இருக்கையில் அமரக் கூடாது என மிரட்டல் விடுகின்றனர் என தெரிவித்திருந்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில  பழனிச்சாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் புகார் தெரிவித்தார்.
 இதையடுத்து கொத்தாளமுத்து, அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடும்பாறை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னனி, எஸ்.எப்.ஐ, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்டச் செயலாளர் தர்மர், மாவட்டத் தலைவர் வீ.மோகன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே . தயாளன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் மணவாளன், போஸ், ஜெய
ராஜ், மோகன், ஆதி தமிழர் கட்சி மாநிலத் தலைவர் விஷ்வகுமார், விடுதலை சிறுத்தை கட்சி     மாவட்ட செயலாளர் நாகரத்தினம், எஸ்.எப்.ஐ.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.