அமைதியை குலைக்கும் மேட்டுப்பாளையம் காவல்துறைக்கு கண்டனம்
கோவை, டிச. 10 – அமைதியை குலைக்கும் விதத்தில் நடூர் கிராமத்தில் தலித் இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தாக்கியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியா கினர். இந்த துயரச்சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் நடூர் பகுதியில் பாது காப்பிற்காக வந்துள்ள போலீசார், தலித் இளைஞரை கடுமையாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து தாக்குதலுக்கு உள் ளான சிவலட்சுமணன் என்பவர் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுவர் விழுந்த நடூர் பகுதியில் என் வீடு அமைந்துள்ளது. 17 பேர் இறந்து போனதற்கு பிறகு எங்கள் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. திங்களன்று காரமடைக்கு சென்று வேலை பார்த்துவிட்டு, வீடு திரும்பிய போது பாதுகாப்பிற்காக போடப் பட்ட போலீசார் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த காரணம் நீதான் எனக்கூறினர். அப்போது, சுவர் விழுந்து 17 பேர் இறந்ததால் எங்களுக்காக போராடுகிறார்கள். இதனால் அவர்களு டன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றேன். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி னர் என தெரிவித்தார். மேலும் சுவர் இடிந்து விழுந்த பிறகு நடூர் பகுதியில் உள்ள இளைஞர்களை நாள்தோறும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்வது, கைரேகை வாங்குவது, சம்பந்தமே இல்லாமல் அடிப்பது என தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் ஆகியோர் கூறுகையில், நடூர் பகுதியில் பாதுகாப்பு என்ற பெயரில் நிற்கிற காவல்துறை தொடர்ந்து அத்துமீறல் நட வடிக்கையில் ஈடுபடுகிறது. இளை ஞர்கள் தொடர் மிரட்டுலுக்கு ஆளா கிறார்கள். இந்த கோர விபத்து ஏற்பட்ட தற்கு பிறகு முதல்வர் உள்ளிட்ட தலை வர்கள் பார்த்துவிட்டு ஆறுதல் தெரிவித்து சென்று கொண்டிருக்கின்ற னர். ஆனால் காவல்துறைக்கு வன்மம் தீரவில்லை என்பது தலித் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து தெரிய வருகிறது. இவர்கள் பாதுகாப்பிற்காகத் தான் நிற்கிறார்களா என்கிற கேள்வி எழுகிறது. தமிழக அரசு உடனடியாக இந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தலித் இளைஞரை தாக்கிய துணை ஆய்வாளர் திலக் மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.